இராமன் விளைவு Raman effect

பொருளொன்றின் வழியே ஒற்றை நிற ஒளி செல்லும்போது சிதறலடைகிறது.சிதறலடைந்த ஒளி படுகின்ற கதிரின் அதிர்வெண்ணை மட்டுமல்லாது சில புதிய அதிவெண்களையும் கொண்டிருந்தது.இதுவே இராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது.

மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகள் இராமன் வரிகள் என்று அழைக்கப்படுகிறது.படும்கதிரைவிட குறைவான அதிர்வெண் கொண்ட வரிகள் ஸ்டோக்ஸ்  வரிகள் என்றும் அதிகமான அதிர்வெண்கொண்ட வரிகள் ஆண்ட்டி ஸ்டோக்ஸ் வரிகள் என்றும் அழைக்கப்படுகிறது.




படுகின்ற ஃபோட்டான் திரவ மூலக்கூறின் மீது பட்டு கிளர்ச்சி அடைய செய்யும்போது அதன் ஆற்றல் சிதறலடிக்கப்படுகிறது.இதனால் கிடைக்கும் குறைந்த அதிர்வெண் கொண்ட சிதறலடைந்த ஒளி ஸ்டோக்ஸ் வரி ஆகும்.

படுகின்ற ஃபோட்டான் கிளர்ச்சி அடைந்த மூலக்கூறின் மீது படும்போது சிதறலடைந்த ஃபோட்டான் அதிக ஆற்றலைப்பெறுகிறது. இதனால் கிடைக்கும் வரி  ஆண்டி ஸ்டோக்ஸ் வரி ஆகும்.

இராமன் நிறமாலை பொருள்களின் பண்புகளை அறியவும் தனிமங்களை வகைப்படுத்தவும் வேதிச்சேர்க்கை பற்றி ஆராயவும் பயன்படுகிறது.




Comments

Popular Posts