Saturday, 18 October 2014

X கதிர்கள் ( X RAYS )

வில்ஹம் ராண்ட்ஜன் எனும் ஜெர்மன் நாட்டு இயற்பியல் அறிஞரால் X கதிர்கள் 1895 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

X கதிர்கள்  0.5 Å முதல் 10 Å  வரையிலான அலை நீளம் கொண்ட மின் காந்த அலைகளே... விரைந்து செல்லும் எலக்ட்ரான் கற்றை உலோக இலக்கின் மீது மோதும்போது X கதிர்கள் தோன்றுவதை கண்டுபிடித்ததற்காக 1901 ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.


 X கதிர்களை உருவாக்குவதற்கு கூலிட்ஜ் குழாய் பயன்படுத்தப்படுகிறது. இலக்குப்பொருளாக அதிக  எடை மற்றும் உருகு நிலை கொண்ட டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது.ஒளியால் ஊடுருவ முடியாத பொருட்களை இக்கதிர்கள் ஊடுருவும். இப்பண்பே பல துறைகளில் இக்கதிர்கள் பயன்படுவதற்கு காரணமாக அமைந்தது.



மருத்துவ துறையில் எலும்பு முறிவு கட்டிகள் பித்தப்பை சிறுநீரக கற்கள் மற்றும் உடலினுள் இருக்கும் foreign bodies  போன்றவற்றை கண்டுணரவும்  கட்டிகள் மற்றும் புற்று நோயை குணப்படுத்தவும் பயன்படுகிறது.



தொழில் துறையில்  பொருட்களின் அமைப்பை ஆராயவும் உட்பகுதியில் உள்ள குறைகள் வெடிப்பினை அறியவும் பயன்படுகிறது.
அறிவியல் துறையில் படிகங்கள் மூலக்கூறுகளின் அமைப்பை அறியவும் தனிமங்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.



 class 12 physics demonstrations click to watch