மின்னல் கடத்தி ( Lightning conductor )
பெஞ்சமின் ஃபிராங்ளின் மின்னல் கடத்தியை தன்னுடைய புகழ்பெற்ற பட்ட(kite) சோதனைக்குப் பிறகு உருவாக்கினார்.
கட்டிடத்தின் மேற்பகுதியில் கூர்முனைகளோடு இணைக்கப்பட்ட தடித்த தாமிரத்தண்டு தரையின் கீழ்ப்பகுதியில் அதிக ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள தாமிரத்தட்டுடன் இனைக்கப்பட்டுள்ளது.
நேர்மின்னூட்டம் பெற்றுள்ள கூர்முனைகள் அருகில் உள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்கின்றன.இது மேகத்தில் உள்ள எதிர்மின்னூட்டத்தின் ஒரு பகுதியை சமன் செய்து மேகத்தின் மின்னழுத்தத்தை குறைக்கிறது.கடத்தியால் கவரப்பட்ட மின்னூட்டங்கள் தரையை நோக்கிப் பயனிக்கின்றன.இதனால் கட்டிடம் மின்னலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
Comments
Post a Comment