Wednesday, 26 November 2014

கார்பன் மின்தடையாக்கிகள் (carbon resistors)


மின் சுற்றுகளில் மின்னோட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் ஒரு உறுப்பு.கார்பன் படிக மெல்லேடு வைக்கப்பட்ட செராமிக் உள்ளகத்தால் ஆனது.அளவில் சிறியது.நிலைத்தன்மை உடையது.மலிவானது.கார்பன் மின்தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளை அவற்றின் மீது வரையப்பட்டுள்ள நிறக்குறியீடுகள் மூலம் அறியலாம்.



ஒரு முனையில்  அமைந்துள்ள  வெள்ளி தங்கம் போன்ற நிறக்குறியீடுகள் மின்தடை மாறுபாட்டு அளவைக் குறிக்கிறது.வெள்ளி 10% தங்கம் 5% சிவப்பு 2% பழுப்பு 1% . நிற வளையம் இல்லையெனில் மாறுபாட்டு அளவு 20%.

மறுமுனையில் அமைந்துள்ள அடுத்தடுத்த இரு வளையங்கள் அந்தந்த நிறத்திற்குரிய மதிப்பைப் பெறும்.மூன்றாவது வளையம் அந்த நிறத்திற்குச் சமமான சுழிகளைப் பெறும். நிறத்திற்குரிய எண்களை நினைவில் கொள்வதற்கு  BB ROY GREAT BRITON VERY GOOD WIFE என்ற சொற்றொடர் உதவும்.

No comments:

Post a Comment

 class 12 physics demonstrations click to watch