மின்கலன்கள் ( Electric cells )

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளின் ஆதிக்கத்திற்குக் காரணமான மின்கலன்கள் தோன்றிய கதை மிகவும் சுவராஸ்சியமானது.

லூயி கால்வானி மற்றும் அவரது மனைவி லூசியா...இவர்களின் உயிரியல் ஆய்வகத்தில் நடந்த ஒரு ஆய்வே மின்கலன்கள் தோன்றியதற்கு காரணமாக அமைந்தது.பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட தவளையின் பாகங்களை கொக்கிகள் மூலம் இரும்பு தண்டவாளத்தில் தொங்கவிட்டிருந்தனர்.தவளையின் கால்கள் இரும்புத்தண்டவாளத்தை தொடும்போதெல்லாம் துள்ளிக்குதித்தது.இதுவே விலங்குகளில் இருந்து மின்சாரம் என்ற கருத்துக்கு வழி வகுத்தது.


இதன்பிறகு அலெக்சாண்ட்ரா வோல்டா துத்தநாக வட்டுக்களை உப்புக்கரைசலில் வைத்து மின்கல அடுக்கு ஒன்றினை உருவாக்கினார்.இந்த சோதனைக்கு பிறகு ஏதேனும் இரு வேறுபட்ட உலோகங்களை மின்பகு திரவம் ஒன்றினுள் வைப்பதன் மூலம் மின்கலம் ஒன்றை உருவாக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.


 டேனியல் மின்கலன் லெக்லாஞ்சி மின்கலன் போன்ற மின்கலன்கள் மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் பெறப்பட்டது.இவற்றில் மின்பகு திரவங்கள் பயன்படுத்தப்பட்டது.அளவில் பெரியதாக இருந்தது.நீண்ட காலம் மின்சாரம் பெறமுடியவில்லை.













பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட உலர்மின்கலன்கள் இந்தக்குறைகளை நீக்கியது.அளவில் சிறியதாக இருந்ததால் ட்ரான்சிஸ்டர் ரேடியோ போன்ற கையடக்க கருவிகளில் பயன்படுத்தப் பட்டது.தற்போது மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்துகொள்ளக்கூடிய பல வகையான மின்கலன்கள் புழக்கத்தில் உள்ளது.

Comments

  1. Air Jordan 20 Retro Game - Air Jordan 20 Retro
    This product is made in Israel. Air Jordan 20 Retro Game If bestest air jordan 18 retro men blue you find air jordan 18 retro racer blue have an alternative version, Type: Game get air jordan 18 retro toro mens sneakers CartridgeColor: AirColor: AirRotation: air jordan 18 retro racer blue to us 90 air jordan 18 retro men blue sports Degrees

    ReplyDelete

Post a Comment

Popular Posts